84 ஆண்டுகள் பழமையான நம் பாதுகாவலி புனித அன்னம்மாள் ஆலயம் இடிக்கப்பட்டு, ரூபாய் 1.5 கோடி செலவில் புதிய ஆலயம் கட்டப்படுகிறது.
விரைவில் ஆலயத்தை கட்டியெழுப்ப தங்களது தாராள நன்கொடைகளை தந்து புனித அன்னம்மாளின் ஆசீரைப் பெற அன்புடன் வேண்டுகிறோம்.
- ஆலய நிர்வாக கமிட்டியார்.

கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்...

வாருங்கள்.. புதிய ஆலயம் கட்டுவோம்...

st.anne

புதிய ஆலயத்தின் முன் தோற்ற படம்
பங்குத்தந்தையால் வெளியீடு.

Photo Gallery New

நம் பாதுகாவலி புனித அன்னம்மாள் ஆலயத்தில் 19-01-22 மாலையில் பங்குத்தந்தை அருட்திரு. சகாயஜஸ்டின் தலைமையில் ஆலய நிர்வாக குழுவினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய ஆலய கட்டுமான பணிக்கு தலைமையாக நமது பங்குத்தந்தையின் தலைமையில் உள்ளூர், வெளியூர் மக்களை இணைத்து "புதிய ஆலய நிதிகுழு " அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
படங்கள் உதவி: WhatsApp: புனித அன்னம்மாள் ஆலயம்

புதிய ஆலயம் கட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம்

புதிய ஆலயம் கட்டுமான பணிகள்

புதிய ஆலயம் கட்டுமான பணிகள்

புனித அன்னம்மாளிடம் ஜெபம்

மகா பரிசுத்தமும் இரக்கமும் 
அனுக்கிரகமும் நிறைந்த புனித அன்னம்மாளே! 

தேவமாதாவின் தாயே!
 
நீர் எம்மாத்திரம் சர்வேசுவரானால் சிநேகிக்கப்பட்டிருக்கிறீர்?
நீர் கேட்கும் மன்றாட்டை அவர் தள்ளிப் போடுகிறதில்லை என்று 
அறிந்திருக்கிற நாங்களும் உமது திருப்பாதத்தை அண்டி வருகிறோம். 
உம்மால் உலகில் நடந்த புதுமைகளுக்குக் கணக்கில்லையே.

வரப்பிரசாதத்தைத் தாராளமாய்க் கொண்ட புனித அன்னையே,
நாங்கள் மெய்யான சம்சாரிகளாய் நடந்து வாய்க்காலோரத்தில்
நாட்டப்பட்ட மரம்போலச் சம்சாரத்தில் நற்கனி தந்து 
எங்கள் துன்பங்களில் ஆறுதலடைந்து பொறுமைகொண்டு 

எங்களுக்கு ஆண்டவர் தந்த பிள்ளைகளை 
நன்னெறியில் நடப்பிக்கும் வரத்தை நாங்கள் அடையப் பண்ணியருளும்.

நாங்கள் குடும்ப வாழ்வில் ஒருமனப்பட்டு
அயல் வீட்டாரோடு சினேகமாய் வாழப்பண்ணும்.

சங்கையும், நற்கீர்த்தியும், ஒருமைப்பாடும்,
சம்சார வாழ்வில் பயபக்தியும் ஒடுக்க வண்ணகமும் 
நாங்கள் பெறச் செய்தருளும்.

எங்கள் பிள்ளைகள் தேவ ஸ்துதியைக் கூறவும்,
நாங்கள் அறிவிலும் தேவ ஆசிர்வாதத்தில் உயரவும் செய்தருளும்.

அன்றன்றுள்ள அப்பத்தை நாங்கள் கொண்டு பசாசினாலும்,
பொல்லாத மனிதராலும் நாங்கள் வெல்லப்படாதிருக்கப் பண்ணியருளும்.

 நாங்கள் வீட்டையும் அதிலுள்ளதையும் 
 அக்கினிக்கும் வெள்ளத்திற்கும் திருடருக்கும் தப்பித்துவிட ஆண்டவரை மன்றாடும்.

கர்த்தர் நகரைக் காக்காவிடில் சாமக்காரன் விருதவாய் விழித்திருப்பான் அல்லோ? 
தேவ பக்தியும் உண்மையும் கீழ்ப்படிதலுமுள்ள ஊழியர்களை நாங்கள் அடையவும்,

எங்கள் பிள்ளைகளுக்குச் சரியான வாழ்க்கைத் துணை அமையவும்
 எங்களுக்காக மன்றாடும்.

எங்கள் உபத்திரவங்கள் இலேசாகவும்,
நாங்கள் நித்யமானவைகளை விரும்பவும் செய்தருளும்.

மகா உன்னதமான வரப்பிரசாதங்களை அடைந்த பரிசுத்த அன்னம்மாளே !
நாங்கள் தேவ வரங்களையே எந்நாளும் நாடி, 
அவரால், அவரில், அவரோடு வாழ்ந்து உய்வடைய 
எங்களுக்காக இறைவனை மன்றாடும்.    -  ஆமென்.

massimg

Please donate to complete the construction of the Church

84 ஆண்டுகள் பழமையான நம் பாதுகாவலி புனித அன்னம்மாள் ஆலயம் இடிக்கப்பட்டு, ரூபாய் 1.5 கோடி செலவில் புதிய ஆலயம் கட்டப்படுகிறது.
விரைவில் ஆலயத்தை கட்டியெழுப்ப தங்களது தாராள நன்கொடைகளை தந்து புனித அன்னம்மாளின் ஆசீரைப் பெற அன்புடன் வேண்டுகிறோம்.
- ஆலய நிர்வாக கமிட்டியார்.

The 84-year-old St. Annammal church has been demolished and a new church is being constructed at a cost of Rs 1.5 crore. We kindly request you to donate generously to complete the construction of the church soon and get the blessings of St. Annammal.
- Church Management Committee.

Rev. Fr. Sahaya Justin (Parish Priest) Ph: 9080797370 e-mail: justinsahaya@yahoo.co.in

Mr. Simon Francis / Mr. Dayalan Ph: 9944083531 / Mr. Michael Ph: 6380171631

massimg

புதிய ஆலய தோற்றம்

Contact Us

St. Anne's Church
Rayappapuram,
Sawyerpuram-628251

Tuticorin Dist,
Tamilnadu, India.

Rev. Fr. Sahaya Justin
Parish Priest
e-mail: justinsahaya@yahoo.co.in
Ph: 9080797370
Mr. Simon Francis
Mr. Dayalan
Ph: 9944083531
Mr. Michael
Ph: 6380171631